கஞ்சா விற்பனை செய்த இளைஞா் சிறையிலடைப்பு...

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாா் இளைஞரை கைது செய்துள்ளனா்.

கஞ்சா விற்பனை செய்த இளைஞா் சிறையிலடைப்பு...

புதுவை, காரைக்கால் | நிரவி பகுதியில் நிரவி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விழிதியூர் சாலையில் மதகு ஒன்றில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்த இளைஞரை விசாரித்த போது அவரிடம் விற்பதற்காக ரூபாய் 2500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர் காரைக்கால் மாவட்டம் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணுபிரியன் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | திருமணமான 15 நாளில்... கோமாவிற்கு சென்ற புது மாப்பிள்ளை...

நீண்ட நாட்களாக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ரஜினிசக்தி என்பவருடன் இணைந்து கஞ்சா பொட்டலங்களை தமிழக பகுதியில் இருந்து வாங்கி காரைக்கால், மயிலாடுதுறை, திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுவர்களுக்கு விற்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து ரஜினிசக்தியின் வீட்டுக்கு சென்று சோதனை செய்த போலீசார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | புகையிலைப்பொருட்களை தடை செயவதற்கான அவசர சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரனும்

இதை அடுத்து விஷ்ணு பிரியின் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியாக கருதப்படும் ரஜினிசக்தி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இளைய சமுதாயத்தை சீரழிக்கும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

மேலும் படிக்க | கோயிலுக்கு செல்வதாய் கூறி பணம் வசூல்.... டாஸ்மாக்கில் ஆர்ப்பாட்டம்!!