பூரி ரதயாத்திரை செல்லும் வழியில் விபத்தில் இறந்த மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர்:

ஜகந்நாத் பூரி ரத யாத்திரையை படம் பிடிக்க செல்லும் வழியில் பிரபல மூத்த புகைப்பட பத்திர்க்கையாளர் அஷோக் பாண்டா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூரி ரதயாத்திரை செல்லும் வழியில் விபத்தில் இறந்த மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர்:

ஜகந்நாத் பூரி ரத யாத்திரையை படம் பிடிக்க செல்லும் வழியில் பிரபல மூத்த புகைப்பட பத்திர்க்கையாளர் அஷோக் பாண்டா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள காபிடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக் பாண்டா உயிரிழந்தார். அவருக்கு வயது 57 என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கைகளின்படி, பாண்டா இன்று அதிகாலையில் வருடாந்திர ரத யாத்திரையை படம் பிடிக்க, தனது மோட்டார் சைக்கிளில் பூரி நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அதிகாலை 5 மணியளவில் சதசங்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் படுகாயம் அடைந்த அஷோக்,  ஆபத்தான நிலையில் காபிடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அசோக் பாண்டா 'சமய்', 'தி ஏசியன் ஏஜ்' மற்றும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களுக்கு பணி புரிந்திருக்கிறார். அவர் 'ஈஸ்டர்ன் பிரஸ் ஏஜென்சி' (EPA) இல் இருந்து புகைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 1984 முதல் 1995 வரை அங்கு பணியாற்றினார். 1996 இல் ஒடியா நாளிதழான 'சமய்' இல் சேர்ந்தார். பின், 1997 முதல் 2000 வரை 'தி ஏசியன் ஏஜ்' -விலும்  2000 முதல் 2011 வரை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா'  வில் பணிபுரிந்தார்.

இது தவிர, 'ஈநாடு' மற்றும் 'சன்மார்க்' படங்களுக்கும் புகைப்படங்களை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.