சினிமா பாணியில் இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டல்!

திரைப்பட பாணியில் நடுரோட்டில் இளம்பெண்ணை மடக்கி, பாலியல் சீண்டல் விடுத்த அமெரிக்க மென்பொறியாளர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

சினிமா பாணியில் இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டல்!

திரைப்பட பாணியில் நடுரோட்டில் இளம்பெண்ணை மடக்கி, பாலியல் சீண்டல் விடுத்த அமெரிக்க மென்பொறியாளர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தான் நேற்று அண்ணா நகர் 2வது அவென்யூவில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது , தன்னை மடக்கி நிறுத்திய இளைஞர் உடலழகை வர்ணித்து, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தில்  பதிவான சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, காரில் வந்த நபர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது உறுதியானது.

இதையடுத்து காரின் எண்ணை கொண்டு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் அண்ணா நகர் 12வது பிரதான சாலையை சேர்ந்த கார்த்திக் என்பதும், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி விட்டு, கடந்த மாதம் இந்தியாவிற்கு திரும்பியதும் தெரிய வந்தது.