3 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்தல்... நான்கு பேரை கைது செய்து நடவடிக்கை...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரேஷன் அரிசியை வீட்டில்  பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நான்கு பேரை கைது செய்த போலீசார் 3டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

3 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்தல்... நான்கு பேரை கைது செய்து நடவடிக்கை...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏரித்தெரு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக, குமாரபாளையம் காவல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வீட்டினுள் சென்று போலீசார் பார்த்த போது 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த பூரண சக்தி, மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல், மணிகண்டன் மற்றும் கோகுல் ஆகிய 4 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். தப்பி ஓடிய இருவர்  குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து குமாரபாளையம் போலீஸார் சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை  கைப்பற்றி குற்றவாளிகளை நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.