செல்போன் விளையாட்டில் முழ்கி போன மகன்... தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு.!!

சென்னை செங்குன்றத்தில் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த மகனை தாய் கண்டிதத்தால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் விளையாட்டில் முழ்கி போன மகன்...  தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு.!!

செங்குன்றம் காமராஜ் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் அமுதவல்லி.  சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு லோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். மகன் லோகேஸ்வரன் சாலிகிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் தங்கியபடி அருகிலுள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் கடந்த வாரம் தனது தாயாரின் வீட்டிற்கு வந்த தங்கிய லோக்கேஸ்வரன், இன்று காலை அமுதவல்லி வேலைக்கு செல்லும்போது தனது மகனிடம் செல்போனை பார்த்து கொண்டே இருக்ககூடாது என கண்டிப்புடன் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் வீட்டிற்கு வந்த அவர், மகன் மின்விசிறியில்  தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் லோகேஸ்வரனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் லோகேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.