இருசக்கர வாகனத்தில் செய்தியாளர் ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா விற்ற மாணவன் கைது...

கோயம்பேடு அருகே செய்தியாளர் என இருசக்கர வாகனத்தில் கஞ்ச விற்பனை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் செய்தியாளர் ஸ்டிக்கர் ஒட்டி கஞ்சா விற்ற மாணவன் கைது...

சென்னை கோயம்பேடு பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது காளியம்மன் கோவில் தெருவாக வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் செய்தியாளர் என ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டார்.

 உடனடியாக போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தார்கள் சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பதை இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்தப் பகுதி இருக்கக் கூடிய இடங்கள் முழுவதும் போலீசார் அந்த நபரை தேடி வந்தார்கள். அதன் பிறகு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓட முயற்சித்தபோது போக்குவரத்து போலீசார் இந்த நபர்தான் என சத்தமிட போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வடபழனி பகுதியை சேர்ந்த இளங்கோ வயது 21  என்பது தெரியவந்தது மேலும் தினமும் வில்லிவாக்கம் சத்யா நகர் ரயில்வே பகுதியிலிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு, நெற்குன்றம், வடபழனி, ஆகிய பகுதிகளில் தனக்கு வேண்டப்பட்ட நபர்களிடம் மட்டும் ஒரு பொட்டாளம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.