நடத்தையில் சந்தேகம்...மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம்..கணவன் வெறிச்செயல்.!!

திருப்பூரில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்...மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம்..கணவன் வெறிச்செயல்.!!

தென்காசியை சேர்ந்த குமார்- தனலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் தனலட்சுமி தனக்கு துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார் கணவர் குமார். இதற்கிடையில் நேற்றிரவு நடந்த வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தனலட்சுமி கழுத்தை குமார் அறுத்து உள்ளார்.

இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  குமாரை கைது செய்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.