டி.வி. மெக்கானிக் அரிவாளால் வெட்டி கொலை :  கொலையாளியை அடித்து கொன்ற கிராம மக்கள் !!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

டி.வி. மெக்கானிக் அரிவாளால் வெட்டி கொலை :  கொலையாளியை அடித்து கொன்ற கிராம மக்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் தங்கராஜா டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  உதயகுமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே  இன்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் அரிவாளால் தங்கராஜாவை சாரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். 

இதை பார்த்த கிராம மக்கள் உதயகுமாரை மடக்கி பிடித்து  தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயக்குமார்  பலத்த காயத்துடன் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன், கிரா மக்களிடம் விசாரணை நடத்தினார். 

அத்துடன்  தங்கராஜா உடலை கைப்பற்றி மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கிராம மக்களால் தாக்கப்பட்ட உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்து போன உதயகுமார் மீது நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது.