கள்ளக்காதலை சேர்த்து வைப்பதாக கூறி அந்தப்பெண்ணிடம் கொஞ்சி பேசிய நண்பர்... ஆத்திரத்தில் வெட்டி கொன்ற டிரைவர்..!

கள்ளக்காதலை சேர்த்து வைப்பதாக கூறிவிட்டு அந்தப்பெண்ணிடம் கொஞ்சி பேசியதால் நண்பனை டிரைவர் வெட்டி கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

கள்ளக்காதலை சேர்த்து வைப்பதாக கூறி அந்தப்பெண்ணிடம் கொஞ்சி பேசிய நண்பர்... ஆத்திரத்தில் வெட்டி கொன்ற டிரைவர்..!

சென்னை நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன். தனியார் கழிவுநீர் ஊர்தி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கும், அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்படவே, அந்தப்பெண் ராமுவின் செல் நம்பரை பிளாக் செய்துள்ளார்.

இதனால் மன உடைச்சலுக்கு ஆளான ராமு, இது குறித்து தன் நண்பர் சுப்பிரமணியிடம் கூறியுள்ளார். அப்போது கவலைப்படாதே "நான் உங்கள் இருவரையும் சமாதானம் செய்து  சேர்த்து வைக்கிறேன்" என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 10-ந் தேதி இரவு நண்பர்கள் இருவரும் நெற்குன்றம் என். டி படேல் சாலையில் உள்ள மைதானத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் போதையில் நண்பர் ராமுவின் கள்ளக்காதலியை செல்போனில் தொடர்பு கொண்ட சுப்பிரமணியன் அந்த பெண்ணுடன் கொஞ்சி கொஞ்சி பேசியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ராமு, தன்னுடன் சேர்த்து வைப்பதாக கூறிவிட்டு தனது கள்ளக்காதலியுடனே நெருக்கமாக கொஞ்சி பேசிக்கிட்டு இருக்கிறாயா? என்று கூறிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதில் முகம் மற்றும் பின் தலையில் வெட்டுபட்டு பலத்த காயமடைந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்ன இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நண்பனை வெட்டிவிட்டு தப்பி சென்ற ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.