மதுவுக்கு காசு கேட்ட நபர்.. நடுரோட்டில் பொளந்து கட்டிய தந்தை - மகன்.. பதபதவைக்கும் வீடியோ!!

மதுவுக்கு காசு கேட்ட நபர்.. நடுரோட்டில் பொளந்து கட்டிய தந்தை - மகன்.. பதபதவைக்கும் வீடியோ!!

நாகையில் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபரை தந்தை, மகன் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நடவண்டி மோகன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் மெழுகுவர்த்தி வியாபாரம் செய்து வரும் மதியழகன் மற்றும் அவரது மகன் ஆனந்த மாரிமுத்து ஆகியோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகன் இருவரும் மோகனை கட்டையால் தாக்கினர்.

தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த நபர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தந்தை - மகனை கைது செய்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.