சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் அத்துமீறல்... 30 பேரை அடையாளம் காட்டிய சிறுமி...

மகாராஷ்டிராவில் சிறுமியை மிரட்டி, பல மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த 2 சிறுவர்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் அத்துமீறல்... 30 பேரை அடையாளம் காட்டிய சிறுமி...

மகாராஷ்டிர மாநிலம், மும்பையை அடுத்த தானே பகுதியில், 15 வயது சிறுமியை மிரட்டி கடந்த 9 மாதங்களாக 30 பேர் கொண்ட கும்பல் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்துள்ளது.

சிறுமியுடன் நட்பாக பழகிய சிறுவன் ஒருவன், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான். பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி, சிறுமியிடம் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அந்த வீடியோவை பலருடன் பகிர்ந்து கொண்ட நிலையில், 30 பேர் கொண்ட கும்பல் அச்சிறுமியை மிரட்டி, கடந்த 9 மாதங்களாக பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது.

தன்னை மிரட்டி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட 30 பேரை சிறுமி அடையாளம் காட்டியுள்ள நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 28 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.