மது குடிக்க கடன் வாங்கிய தொழிலதிபர் : கூலிப்படையை வைத்து தந்தையே கொன்ற சம்பவம் !!

திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கூலிப்படை ஏவி மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். 

மது குடிக்க கடன் வாங்கிய தொழிலதிபர் : கூலிப்படையை வைத்து தந்தையே கொன்ற சம்பவம் !!

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்திவரும் இவர் தனது மனைவியை பிரிந்து, தனது தாய் காளியம்மாள் மற்றும் தந்தை அப்புக்குட்டியுடன் சிட்கோ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 28ம் தேதி அமாவாசை என்பதால் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் பழனி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்ட சூழ்நிலையில் பாலசுப்ரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில்  நள்ளிரவில் பாலசுப்ரமணியம் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து வீட்டில் தனியாக இருந்த கத்தியால் பாலசுப்பிரமணியத்தை வெட்டி கொலை செய்துள்ளனர். கோவிலுக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு கொளையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். மேலும் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்த போது பாலசுப்ரமணியின் இருசக்கர வாகனத்தை கொளையாளிகள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. 

சம்பவம் நடைபெற்ற வீடு மற்றும் அருகில் சிசிடிவி கேமரா இல்லாததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

மேலும் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாலசுப்பிரமணியத்தின் தந்தை அப்புகுட்டி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்சனைக்காக கூலிப்படையை வைத்து தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(21) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அப்புகுட்டி பண விஷயத்தில் கறார் பேர்வழி. ஆனால் அவரது மகன் பாலசுப்பிரமணியம் மனைவியை விவாகரத்து செய்ததற்கு பிறகு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பணத்தை அதிக அளவில் செலவு செய்து வந்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் கடனும் வைத்துள்ளார். இதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

மகன் வாங்கிய கடனுக்காக தனது சொத்தை விற்று அப்புகுட்டி கடனை அடைத்துள்ளார். அதன் பிறகும் பாலசுப்பிரமணியம் திருந்தவில்லை. மகனின் இந்த போக்கால் பிற்காலத்தில் தனது மகளுக்கு எந்த சொத்தும் இருக்காது என்று எண்ணிய அப்புகுட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் மூலம் கூலிப்படையை வைத்து தனது மகனை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.