சாப்பாடு டேஸ்டாக இல்லை என ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்... 

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்திற்கு உணவு உண்ண வந்த 5 பேர் கொண்ட கும்பல் உணவு சுவையில்லை என வாக்குவாதம் செய்து ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பாடு டேஸ்டாக இல்லை என ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்... 

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட உணவகங்கள்,பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பினில் என்ற ஹோட்டலுக்கு 5 பேர் உணவு உண்ண வந்துள்ளனர். இந்நிலையில் உணவு ருசியாக இல்லை என கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கேட்ட கடை ஊழியர் விக்ரமாதித்தன் தனது முதலாளியை தரக்குறைவாக பேசிய உணவருந்த வந்த நபரிடம் சாடியுள்ளார்.

இதில் குடிப்போதையில் இருந்த உணவு உண்ண வந்த நபர்கள் ஆத்திரமடைந்து 5 பேர் கொண்ட கும்பல் விக்ரமாதித்தன் என்ற 40 வயது உடைய கடை ஊழியரை சரமாரியாக ஓட ஓட தாக்கியுள்ளனர்,மேலும் கடைகளில் உள்ள சேர்களை தள்ளிவிட்டும், சமையலுக்கு வைத்திருந்த முட்டைகளை உடைத்தும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அழகேசன் என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிப்போதையில் உணவு உண்ண ஹோட்டலுக்கு வந்த கும்பலால் தாக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.