இந்த தங்க வேட்டையை நடத்தியவன் பெயரும் முருகனாம் !!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடெரல் கோல்டு லோன் நிறுவனத்தில் 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பியவன் பெயரும் முருகன் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தங்க வேட்டையை நடத்தியவன் பெயரும் முருகனாம் !!

வங்கியில் கொள்ளை

சென்னை பாடி படவட்டம்மன் கோயில் தெருவைச் செர்ந்த முருகன் கடந்த 2½ ஆண்டுகளாக அரும்பாக்கம் கிளை ஃபெடரல் கோல்டு லோன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவன ஊழியர்கள் பற்றியும் அறிந்த முருகன் தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் கோல்டு லோன் நிறுவனத்திற்கு வந்து காவலாளிகளிடம் பேச்சுக்கொடுத்து மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார்.

Daylight bank heist in Chennai; currency, gold worth Rs 20 cr looted

குளிர்பானத்தில் மயக்கமருந்து

தெரிந்த நபர் என்பதால் அதை வாங்கிக் குடித்த காவலாளிகள் சரவணன் உள்ளிட்டோர் கிறக்கம் அடைந்த நிலையில், அவர்களை கடந்து உள்ளே சென்ற முருகன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கோல்டு லோன் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்த அவர்கள் அதிலிருந்த சுமார் 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியுள்ளனர். முன்னதாக கோல்டு லோன் நிறுவனத்திற்கு வந்த டேவிட் என்ற வாடிக்கையாளர் மறைந்திருந்து நடந்த சம்பவங்களை கண்காணித்துவிட்டு கொள்ளையர்கள் வெளியேறியதும் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த அரும்பாக்கம் போலீசார் கோல்டு லோன் நிறுவனத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் துவங்கினர். குறிப்பாக மோப்ப நாய்களை வரவழைத்து கொள்ளையர்கள் சென்ற திசையை கண்டறிய போலீசார் முற்பட்டபோது மோப்ப நாய்கள் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் வந்ததையடுத்து விசாரணை தீவிரமடைந்தது.

நிறுவன ஊழியர்

கொள்ளையர்களால் கட்டிப்போடப்பட்ட கோல்டு லோன் நிறுவன ஊழியர்களிடம் கூடுதல் ஆணையர் அன்பு விசாரணை நடத்தினார். விசாரணையில் வந்தவர்களின் ஒருவன் அதே நிறுவனத்தின் ஊழியரான முருகன் என்பதை ஊழியர்களும், காவலாளிகளும் உறுதிப்படுத்தி வாக்குமூலம் அளித்துள்ளனர். தடயவியல் நிபுனர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு கொள்ளையர்கள் தவறவிட்ட தடயங்கள், கைரேகைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டுள்ளது. கோல்டு லோன் கொள்ளைச் சம்பவத்தை கேள்வியுள்ள வாடிக்கையாளர்கள் பலர் நிறுவனத்தின் முன்பு கூடியதால் பரபரப்பும் அதிகரித்தது.

4 தனிப்படை

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் அன்பு, கொள்ளையில் ஈடுபட்டவர்களுள் கோல்டு லோன் நிறுவன ஊழியர் முருகன் என்பவனும் சம்மந்தப்பட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளதாகவும், அதனால் கொள்ளையர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், கொள்ளை போன நகைகளின் மதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். விசாரணை நடைபெறுவதால் கூடுதல் தகவல்களை தெரிவிக்க இயலாது எனவும், வாடிக்கையாளர்களின் பறிபோன நகைகள் பத்திரமாக மீட்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

முருகன்

தமிழ்நாட்டில் நடக்கும் பெரிய அளவிலான தங்கக் கொள்ளைகளை முருகன் என்ற பெயரில் உள்ளவர்களே அரங்கேற்றி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற ஆசிரியையை வழிமறுத்து பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்தவன் நீராவி முருகன்.

நீராவி முருகன்: மயானத்துக்கு வழிகாட்டிய அடாவடி வாழ்க்கை! | neeravi Murugan  relatives were not ready to receive his body and doing rituals

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 கிலோ தங்கம் கொள்ளையடித்தவனும் முருகன்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: பத்தாண்டுகளாக சிக்காத திகில்  கொள்ளையன் முருகன் சரண் | Truchi Lalitha jewellery robbery: Murugan  Surrender - hindutamil.in

கடந்த ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையின் பின்புறம் துளையிட்டு கூட்டாளிகளுடன் 15 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவனும்  முருகன்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கொள்ளை: மூட்டையாக கட்டி பதுக்கிய கொள்ளையன் - ஐந்தே  நாட்களில் பிடித்தது எப்படி | Vellore Jos alukkas theft How To Be A Favorite  In Five Days - Tamil ...

அந்த வரிசையில் தற்போது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடெரல் கோல்டு லோன் நிறுவனத்தில் 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பியவன் பெயரும் முருகன் என்பது தெரியவந்துள்ளது.