கம்ப்யூட்டரை ஹேக் செய்து 980 அமெரிக்க டாலர்கள் வேண்டும் என்று மிரட்டிய நபர்.! போலீசார் விசாரணை.! 

கம்ப்யூட்டரை ஹேக் செய்து 980 அமெரிக்க டாலர்கள் வேண்டும் என்று மிரட்டிய நபர்.! போலீசார் விசாரணை.! 

போட்டோ ஸ்டுடியோ கம்ப்யூட்டரை ஹேக் செய்து அமெரிக்க டாலர்களை கேட்டு மிரட்டும் நபர் பற்றி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் பிளவர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் திவாகர் (38). இவர் அரும்பாக்கம் ஜெகநாதன் நகர் மெயின் ரோட்டில் நாவல்டி பிலிம்ஸ் ஸ்டுடியோ ஒன்றை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

அதில், "கடந்த மே மாதம் 15-ம்தேதி எனது கம்ப்யூட்டரை அடையாளம் தெரியாத நபரால் ஹேக் செய்யப்பட்டது. கம்ப்யூட்டரில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அடையாளம் தெரியாத நபர் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கி விட்டார். 

பிறகு helpmanager@air mail. com இமெயில் முகவரியில் இருந்து தனக்கு  குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியில் "உன் போட்டோக்கள் வீடியோக்கள் வேண்டும் என்றால் தனக்கு 980 அமெரிக்க  டாலர் இந்தியா ரூபாய் மதிப்பில் 73,500 தர வேண்டும் என மிரட்டி உள்ளதாக" புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வரும் திவாகர் தான் எடுத்த திருமண நிகழ்ச்சிகளின் படங்கள், வீடியோக்களை ஹேக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற புகார்கள் தொடர்ச்சியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வருவதாகவும் புகாரின் அடிப்படையில் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.