பூட்டி கிடந்த 5 வீடுகள்.,இது தான் சாக்கு என்று உள்ளே புகுந்து கொள்ளை அடித்த கொள்ளையர்கள்.! வேளச்சேரியில் அதிர்ச்சி.! 

பூட்டி கிடந்த 5 வீடுகள்.,இது தான் சாக்கு என்று உள்ளே புகுந்து கொள்ளை அடித்த கொள்ளையர்கள்.! வேளச்சேரியில் அதிர்ச்சி.! 

சென்னை வேளச்சேரியில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரின் 7வது மற்றும் 6வது தெருவில் அடுத்தடுத்து உரிமையாளர்களின்றி பூட்டிக் கிடந்த 5 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பூட்டிய அடுக்குமாடி வீடுகளை குறிவைத்து ஒரே இரவில் கொள்ளையர்கள் வீடுகளில் புகுந்து இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள குடியிருப்பு வா சிகள் கொடுத்த தகவலின் பேரில் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டின் உரிமையாளர்களை தொலைபே சி மூலம் தொடர்புகொண்டு ஆய்வு செய்ததில், மூன்று வீடுகளில் எவ்வித பொருட்களும் இல்லாததால் கொள்ளை போகவில்லை என்பதும் மற்ற இரண்டு வீடுகளில் லேப்டாப், மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கைரேகை பதிவுகளை போலீசார் பதிவு செய்துள்ளதாகவும், சி. சி.டி.வி காட் சிகளை ஆய்வு செய்ததில் மூன்று நபர்கள் வந்து செல்வது தெரியவந்ததுள்ளதால் அதை வைத்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வந்தவர்களின் அடையாளத்தை வைத்து இது வட மாநில கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.