குறைந்த விலையில் டூவீலர் : ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மோசடி செய்த ராணுவ வீரர் !!

குறைந்த விலையில் இருசக்கர வாகன இருப்பதாக முகநூலில் பதிவு செய்து ராணுவ வீரர் எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த நபருக்கு போலீசார் வலைவீச்சு.

குறைந்த விலையில் டூவீலர் : ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மோசடி செய்த ராணுவ வீரர் !!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கவுரிவாக்கம்,சாந்தி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர், சுதாகர் ராஜா (வயது 40) இவர் கட்டுமான ஒப்பந்ததாரராக பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது முகநுால் பக்கத்தில் இருசக்கர வாகனம் குறைந்த விலை 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது.

அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர் ஹிந்தியில் பேசியதால் தனது நண்பனை வைத்து பேசியுள்ளார்.அப்போது அந்த நபர் விளம்பரத்தை பதிவு செய்தது தான் என்பதும் நான் ஒரு ராணுவ அதிகாரி எனவும் தன் பெயர் முகமது ரபீக் எனவும் அறிமுகப்படுத்தி கொண்டார்.

நான் பல்லாவரம் ராணுவ குடியிருப் பில் வசித்து வருவதாக கூறிய அவர் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் வாகனத்தை கொரியர் மூலமாக அனுப்புவதாகக் கூறி கொரியருக்கான பணம்  3 ஆயிரம் ரூபாயை யு. பி.ஐ கோர்ட் ஸ்கேன் செய்து அனுப்புமாறு சுதாகர் ராஜா அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக யு பிஐ கோர்டை அனுப் பியுள்ளார். 

பின்னர் முகமது ரபீக் அவர்களுக்கு சுதாகர் ராஜா பணத்தை ஜிபே மூலமாக அனுப் பி வைத்துவிட்டு பின்னர் விலாசம் மற்றும் ஆதார் கார்டு நகல் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலமாக சுதாகர் ராஜா அனுப் பியுள்ளார்.

பின்னர் சுதாகர் ராஜாவிற்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனம் கொரியர் அலுவலகத்தில் இருப்பதாகவும் 7000 ரூபாய் கொடுத்தால் வண்டியை வீட்டுக்கு அனுப் பி வைப்பதாக கூறியதால் தொடர்ந்து பணம் வாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக சந்தேகமடைந்த அவர் முகமது ர பிக் அவர்களை தொடர்பு கொண்டபோது அந்த நபர் அழைப்பை எடுக்கவில்லை.

பின்னர் சுதாகர் ராஜா ஏமாற்றப்பட்டதை அறிந்த உடன் ஆன்லைனில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் சேலையூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப் பிரிவு போலீசார் ஆன்லைனில் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.