தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்..!

திருப்பூர் அருகே சொந்த மகனே தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்..!

கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். மதுபழக்கத்துக்கு ஆளான இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து ரகளையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம், இரவு குடித்து விட்டு வீடு திரும்பிய அவர், வீட்டில் இருந்த மகன், மகள் மற்றும் தாய் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அஸ்வத், செல்வராஜின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துககு வந்த போலீசார் அஸ்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.