பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த திருடன்...! கையும் களவுமாக பிடிபட்டு தப்பித்த சம்பவம்...!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த திருடன்...! கையும் களவுமாக பிடிபட்டு தப்பித்த சம்பவம்...!

தேனி மாவட்டம் கண்டனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜி. உசிலம்பட்டி கிராமத்தில் பழைய இரும்பு கடையை வைத்து நடத்தி வருபவர்  சரவணன்(45). இவரது கடைக்கு  பட்ட பகலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அங்குள்ள சாக்கு முட்டையில் படுத்துக் கொண்டே பொதுமக்களின் நடமாடத்தை கண்காணித்துள்ளார்.

பின்னர் கடையின் பூட்டை உடைத்து, கடைக்கு உள்ளே சென்ற நேரத்தில் கடை உரிமையாளர் சரவணன் தற்செயலாக கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்து இருப்பதை கண்டு சுதாரித்துக் கொண்ட உரிமையாளர், திருடனை தேடியுள்ளார். கடைக்குள்  பதுங்கி இருந்த திருடன், திடீரென கடைக்கு வெளியில் தப்பி ஓட முயற்சித்த போது கடை உரிமையாளர் திருடனை கையும் களவுமாக பிடித்தார். 

ஆனால் சுமார் 20 நிமிடங்களாக, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திருடன் உரிமையாளரின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கண்டமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தும் கடையில் இருந்த சிசிடிவி காட்சியின் பதிவுகளை வைத்தும் திருடனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்