கணவரை 10 பாகங்களாக்கி பிரிட்ஜில் வைத்த மனைவி..! தலைநகரை அதிர வைத்த சம்பவம்

கணவரை 10 பாகங்களாக்கி பிரிட்ஜில் வைத்த மனைவி..! தலைநகரை அதிர வைத்த சம்பவம்

கணவரை 10 பாகங்களாக வெட்டி பிரிட்ஜில் வைத்து பின்னர் அப்புறப்படுத்திய மனைவியும் மகனும் காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட சிக்கிக்கொண்டுள்ளனர்.

ஷ்ரத்தா கொலை:

டெல்லின் இளம் பெண் ஷ்ரத்தா கொலை சம்பவத்தை கேள்விபட்ட போது இப்படியும் ஒரு இளைஞர் இருக்க முடியுமா என அச்சம் கொண்டனர் மக்கள். 35 பாகங்களாக வெட்டிய அப்தாப், அவரின் உடல் எங்கு வீசினார் எனத் தெடி வருகின்றனர் காவல்துறையினர். இன்னும் அந்த சம்பவத்தில் இருந்தே மக்கள் வெள்வராத நிலையில் மேலும் அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் தலைக்கு அருகில் காய்கறி..! புது காதலி..! காவல்துறை விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மைகள்..!

ஷ்ரத்தாவின் உடல் இல்லை:

ஷ்ரத்தாவின் உடல் பாங்களைத் தேடி சென்றபோது கிடைத்த பாகங்களை சோதனை செய்ய அனுப்பிய போது தான் காவல்துறையினருக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள இல்லை என்று. தெரிந்ததும் அதிர்ந்து போன காவல்துறையினர் அது யாருடையது என்பதி கண்டுபிடிக்க அடுத்தகட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். எந்த துப்பும் கிடைக்காத நிலையில், உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காமிராவை ஆய்வு செய்த போது சிக்கியுள்ளார் பெண் பூனம்.

DNA

2 கணவர்கள்:

பூனம் என்பவருக்கு 2 கணவர்கள். முதல் கணவன் பெயர் கல்லு. இவர்களுக்கு பிறந்த மகன் தீபக். கடந்த 2016 இல் உடல்நிலை சரி இல்லாமல் கல்லு இறந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த வருடமே, அஞ்சன் தாஸ் என்பவரை 2 ஆவது திருமணம் செய்துள்ளார் பூனம். அஞ்சன்தாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் அனைவௌம் பீகாரில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, பூனத்தை 2 ஆவது திருமணம் செய்துகொண்டுள்ளார் அஞ்சாந்தாஸ்.

இதையும் படிக்க: ப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் தலைக்கு அருகில் காய்கறி..! புது காதலி..! காவல்துறை விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மைகள்..!

பல பெண்களுடன் உறவு:

எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த அஞ்சான் தாஸ்க்கு மேலும் பல பெண்களுடனும் தகாத உறவு இருந்துள்ளது. அதை தட்டி கேட்டபோது கணவன், மனைவி இடையே தகறாறு எழுந்துள்ளது. மேலும் குடித்துவிட்டு வந்து தினமும் பூனமை அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். இதை அனைத்தையும் பொறுக்க முடியாத பூனம், தனது மகனுடன் சேர்ந்து அஞ்சாந்தாஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 

கழுத்தை அறுத்து கொலை:

சம்பவத்தன்று தாஸுக்கு, மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க செய்துள்ளனர். அதன் பின்னர், கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். உடலை வெட்டிக் கொன்றதால், ரத்தம் பீறிட்டு வெளிதுள்ளது. அதனால், ரத்தம் முழுவதும் வடியும் வரை வீட்டிலேயே உடலை வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக, சடலத்தை 10 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து மூடியுள்ளனர்.

 கிணறு பூதம்

4 பாகங்கள் தேடல்:

பிரிட்ஜில் வைத்திருந்த உடல்களை ஒவ்வொன்றாக பாண்டவ நகர் பகுதியில் எடுத்து வீசியுள்ளனர். ஷ்ரத்தாவின் உடலை தேடிய நிலையில் இவரின் உடல் பாகங்கள் கிடைத்ததால் இந்த கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாயும், மகனும் கைது செய்யப்படுள்ள நிலையில், வீசிய உடல் பாகங்களில் இப்போதைக்கு 6 பாகங்களை மீட்டுள்ளனர். இன்னும் 4 பாகங்கள் எங்கே என்று தெரியாமல தேடிக் கொண்டுள்ளனர் காவல்துறையினர்.