கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண்கள்...! போலீசாரின் பிடியில் சிக்கிய சம்பவம்...!

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண்கள்...! போலீசாரின் பிடியில் சிக்கிய சம்பவம்...!

வடசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்வதாக காசிமேடு துறைமுக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார்  புதுவண்ணாரப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் பரமேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டை பரிசோதனை செய்ததில் அரசு மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்கபட்டது தெரியவந்துள்ளது

இதனையடுத்து  பரமேஸ்வரியையும் (60), அவருக்கு உடந்தையாக இருந்த இந்திராவையும்(65) பிடித்து நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.