மது வாங்கி தர கூறி அடிமை போல் நடத்திய - நண்பனை கொலை செய்த இளைஞர்!!

மது வாங்கி தர கூறி அடிமை போல் நடத்திய - நண்பனை கொலை செய்த இளைஞர்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நண்பனை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஈஸ்வரன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அவரது மனைவி வந்து பார்த்தபோது கூலி தொழிலாளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூலி தொழிலாளியை கொலை செய்தது தெரியவந்தது. ஈஸ்வரன் தினம்தோறும் மது வாங்கி தர கூறி தன்னை அடிமை போல் நடத்தியதால், அவரது வீட்டிற்கு சென்று கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.