திருச்சி: பூட்டியிருந்த வீட்டில் 105 பவுன் நகை கொள்ளை.. சிசிடிவி ஹார்டு டிஸ்குகளையும் விட்டு வைக்கவில்லை..!

தொடர் கொள்ளைகள் அரங்கேறுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு..!

திருச்சி: பூட்டியிருந்த வீட்டில் 105 பவுன் நகை கொள்ளை.. சிசிடிவி ஹார்டு டிஸ்குகளையும் விட்டு வைக்கவில்லை..!

அபுதாபியில் வசித்து வந்த நபர்:

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி கனிமொழி தனது குழந்தைகளுடன் சீர்காழியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 
சென்றுள்ளார். 

வீட்டில் இருந்து 105 பவுன் திருட்டு:

விடுமுறை முடிந்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அலமாறியில் இருந்த 105 பவுன் நகை மற்றும் ரூ.70,000 பணம் திருடு போனது தெரியவந்தது. மேலும் மோப்ப நாய் பொன்னி உதவியிடன் அங்கு சோதனை செய்யப்பட்டது. 

ஹார்டு டிஸ்குகளையும் விட்டு வைக்கவில்லை:

வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்யலாம் என முயன்ற போது, கொள்ளையர்கள் அதன் ஹார்டு டிஸ்குகளையும் சேர்த்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.