தனியார் பேருந்து உரிமையாளர் ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி வைரல்!!

பேருந்து இயக்குவதில் ஏற்படும் சிக்கலை தீர்த்து வைக்குமாறும் போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை...

தனியார் பேருந்து உரிமையாளர் ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி வைரல்!!

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் குறித்த நேரத்தில் பேருந்தை இயக்குவதில் உள்ள சிக்கல் காரணமாக அவ்வப்போது வாக்குவாதம், தகராறு ஏற்படும்.

இந்நிலையில், நேற்று பேருந்து நிலையத்தில் எஸ்.ஆர். கே எனும் தனியார் பேருந்தின் உரிமையாளர் கவியரசு மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதனையடுத்து கவியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், பேருந்து இயக்குவதில் ஏற்படும் சிக்கலை தீர்த்து வைக்குமாறும் போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.