இது என்னது புதுசா இருக்கு.. "கொரியர், தபால் மூலம் போதை மாத்திரை சப்ளை".. யாருப்பா அவரு? என்ன ஆச்சி அவருக்கு?

சென்னையில் ஆன்லைனில் நவீன போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது என்னது புதுசா இருக்கு.. "கொரியர், தபால் மூலம் போதை மாத்திரை சப்ளை".. யாருப்பா அவரு? என்ன ஆச்சி அவருக்கு?

போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். வடசென்னையில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர் மூலம் சென்னையில் போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில்,  தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா என்பவரை கைது செய்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் போதே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்துடன் இருந்த அவர், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனையடுத்து டெல்லி சென்ற அவருக்கு, உயர் ரக போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் மற்றும் உயர்ரக கஞ்சா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி, அதன் மூலம் போதை மாத்திரைகள் கேட்பவர்களுக்கு, தபால் மற்றும் கொரியர் மூலம் விநியோகம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து உயர்ரக கஞ்சா மற்றும் ஏராளமான போதை மாத்திரைகளையும் போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.