கடனுக்கு மது தராததால் ஆத்திரம் :  மதுபானக்கடை ஊழியரை தாக்கிய இளைஞர்கள் !!

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்கள் கடன் தராததால் மது கடைக்குள் சென்று ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.

கடனுக்கு மது தராததால் ஆத்திரம் :  மதுபானக்கடை ஊழியரை  தாக்கிய இளைஞர்கள் !!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கோபுவானிபாளையம் நகரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதில் சீனிவாசராவ் என்பவர் வேலை செய்து வருகிறார்.  நேற்று மாலை அந்த மதுபான கடைக்கு வந்த இளைஞர்கள் மூன்று பேர் சீனிவாசராவிடம் மது பாட்டில்கள் கடனாக கேட்டுள்ளனர். 

அப்போது அவர் இது தனியார் மது கடை அல்ல. அரசு மதுபான கடை.   மது பாட்டில்களுக்கு இரவில் அந்த பணத்தை செலுத்திவிட வேண்டும்.  
ஆகையால் கடன் தர முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்களும் கடைக்குள் சென்று அந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பயந்துபோன அந்த ஊழியர் தருகிறேன் வெளியே வாருங்கள் எனக்கூறி வெளியே சென்று அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ள நிலையில் அந்த ஊழியர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய அந்த மூன்று இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.