அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள பெரியார்க்குறிச்சி கிராமம் நல்லான் காலனி தெருவை சேர்ந்த விசிக பிரமுகர் கருணாநிதி, இவரது மகன் சுதர்சன் என்பவர் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து பஸ் மூலம் செந்துறை வந்துவர், செந்துறை ரயில் நிலையத்தில் சென்று அங்கு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார், பின்னர் ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவம் இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு நிலையில் இறந்துவிட்டார்.
தகவலறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து விருத்தாசலம் ரயில்வே போலீஸ் மற்றும் சுதர்சன் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது காதல் தோல்வியா என பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 21 வயது இளைஞன் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.