தொழில் போட்டியில் இருதரப்பினரிடையே மோதல்... கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்தது!!

தொழில் போட்டியில் இருதரப்பினரிடையே மோதல்... கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்தது!!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் நள்ளிரவில் நடைபாதை வியாபாரிகள் காவல்  நிலைய வாசலில் கற்கலை வீசி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பூ விற்று வருகிறார். இதே போல் உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வள்ளி என்பவர், அதே இடத்தில் சோளம் விற்பனை செய்து வருகிறார். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கவுசல்யா, வள்ளி இருவரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த பிரச்சனையை அறிந்து வள்ளிக்கு ஆதரவாக அவரது மகன் துளசி மற்றும் சில வாலிபர்களும், கவுசல்யாவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் நாராயணன் மற்றும் சில வாலிபர்களும் வந்தனர். இரு தரப்பு கும்பலும்  மணக்குள விநாயகர் கோவில் அருகே விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி மோதி கொண்டனர். 

அப்போது, இருதரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டதில், வள்ளியின் மகன் துளசியின் மண்டை உடைந்தது. இருதரப்பினரும் காவல் நிலையம் சென்ற போது, அங்கும் மீண்டும்  மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com