செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே ரேணுகா என்பவர், ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அவரது மருத்துவமனைக்கு சென்ற போலீசார், பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த போது கையும் களவுமாக கைது செய்தனர்.