விஜய் மல்லையா… நிரவ் மோடியை மிஞ்சிய மோசடி மன்னன்… பல கோடிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வெறித்தனம்…  

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு அனுப்பி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஜய் மல்லையா… நிரவ் மோடியை மிஞ்சிய மோசடி மன்னன்… பல கோடிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வெறித்தனம்…   

சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (46). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சென்னையிலுள்ள இந்தியன் வங்கி ஆயிரம் விளக்கு கிளையில் பி.கே டூல்ஸ் (BK Tools) என்ற பெயரில் போலியான நிறுவனத்தை உருவாக்கி அதற்கான போலி ஆவணங்களையும் சமர்பித்து அதன் மூலம் அவ்வங்கியில் நடப்புக் கணக்கு ஒன்றை (Current Account) தொடங்கி உள்ளார். பின்னர் அந்த கணக்கு மூலம் தொடர்ந்து வெளி நாடுகளுக்கு எலக்ட்ரானிக் மற்றும் எலக்டிரிக்கல் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதுபோல நாடகமாடி அதற்கான சுங்கதுறையில் அளிக்கப்படும் ரசீதையும் அங்கு பெறப்பட்டது போல் போலியாக உருவாக்கியுள்ளார். மேலும் அந்த ரசீதுகளை கண்ணன் இந்தியன் வங்கியில் சமர்பித்து பல கோடி ரூபாய் பணத்தை வெளி நாடுகளுக்கு பணப் பரிவர்தனை செய்துள்ளார்.

இந்த மோசடியைக் கண்டறிந்த இந்தியன் வங்கி நிர்வாகம், இந்த மோசடிச் செயல் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்ணன் ஏற்படுத்தியதாகக் கூறி சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் போலி ஆவண தடுப்பு பிரிவில் (Forgery Investigation wing) வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவுக் குற்றவாளியான கண்ணனை கைது செய்ய போலி ஆவண தடுப்பு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தனிபடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்துவந்த கண்ணனின் இருப்பிடத்தை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அவரின் செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்து, இன்று கண்ணனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கண்ணனை மத்திய குற்றபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.