பெண் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் : போதை ஆசாமியின் வெறிச்செயல்

சென்னையில் பெண் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெண் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் : போதை ஆசாமியின் வெறிச்செயல்
Published on
Updated on
1 min read

சென்னையில் பெண் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி  மக்கள் சிலர் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கஞ்சா போதையில் வந்த போதை ஆசாமி ஒருவர் தகாத வார்த்தைகளால் சத்தமாக வசைபாடியபடி அப்பகுதியில் நடந்து வந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்க முற்பட்டபோது போதை ஆசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளான். போதை ஆசாமி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அப்பகுதி மக்களான உமா ராணி, பலராமன், கோபி உட்பட 4 பேருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு உடல் முழுவதும் ரத்தக்களரியாக காணப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தப்பியோட முயன்ற போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நபர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதை ஆசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சூனாம்பேட்டையைச் சேர்ந்த நீலமேகம் என்பதும் அவன் மயிலை சிவாவின் கூட்டாளிகளுள் ஒருவன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com