தருமபுரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் - மனைவி இருவரும், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலஜங்கமனஹள்ளி கூன்மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் - வள்ளியம்மாள் தம்பதி, திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
மதிகோன்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன் - மனைவி இருவரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.