கடன் திருப்பிக் கொடுக்க முடியாத தந்தையை தீ வைத்து எரித்த மோசக்காரர்கள்!

கடன் திருப்பிக் கொடுக்க முடியாத தந்தையை தீ வைத்து எரித்த மோசக்காரர்கள்!
Published on
Updated on
2 min read

கடன் பிரச்சனை எங்கு திரும்பினாலும் இருக்கிறது. அதிலும், பெரிய அளவில் கடன் வாங்கியவன் கூட சிறப்பாக தான் இருக்கிறார். அதுவே, சிறிய அளவில், தேவைக்காக கடன் வாங்கிய ஒவ்வொருவரும் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், இந்தியாவில் அடுக்கடுக்காக நடந்துக் கொண்டே இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் அவமானப்படுத்துவது மற்றும் அடித்து துன்புறுத்தும் கதைகளை நாம் கேட்டிருப்போம்.

ஆனால், அவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு சம்பவம் தான் தற்போது தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக, “ராஜீவ்” என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவரை, எரிபொருள் ஊற்றி எரித்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி, புதுடெல்லி ரயில் நிலையத்தில் படுத்துக் கொண்டிருந்த “ஜோக்ராஜ் லால்” என்பவர் மீது, குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் என்பவர், பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது மனைவி மகள் முன்னேயே இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. லாலை கொளுத்தி விட்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்ற ராஜிவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 80 சதவீதம் எரிந்து படுகாயமடைந்துள்ள லால், ராஜிவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதில், “இந்தாண்டில், கடந்த மே மாதம் ராஜீவிடம் கடன் வாங்கியதை அடுத்து, அதனை திருப்பிக் கொடுக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால், அதை அவர் குறிப்பிட்ட தேதிக்குள் என்னால் கொடுக்க முடியவில்லை. என்னை தொடர்ந்து வற்புறுத்திய ராஜீவ், கடந்த வியாழன் (22 செப்டம்பர்) அன்று என்னை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார். என்னால் இந்த புகாருக்கு கையெழுத்துக் கூட போடமுடியவில்லை. எனது கால் கட்டை விரல் வைத்து தான் புகாரில் கையெழுத்து போட்டிருக்கிறேன்” என எழுதப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விடியற்காலை 2 மணியளவில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராஜீவ் உதவி கேட்டு கதறிய பிறகும் தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியதாக லால் கூறினார். செருப்புத் தைக்கும் லால், எப்போதும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே உறங்குவதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று மட்டும் ரயில் நிலையத்தில் உறங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

பதறவைக்கும் இச்சம்பவத்தால் அப்ப்குதியில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் ராஜீவ் மீது விசாரணை நடத்த இருக்கும் நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் லால்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com