20 க்கும் மேற்பட்ட பெண்கள்... மிரட்டியே தனது இச்சைக்கு பணிய வைத்த நாகராஜன்? அதிரவைக்கும் பாலியல் வன்கொடுமை!!

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் கடந்த சில நாள்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற தடகள பயிற்சியாளர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

20 க்கும் மேற்பட்ட பெண்கள்... மிரட்டியே தனது இச்சைக்கு பணிய வைத்த நாகராஜன்? அதிரவைக்கும்  பாலியல் வன்கொடுமை!!

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாளுக்கு நாள் புது வடிவம் பெற்று பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அந்த பள்ளி குறித்தான பல குற்றச்சாட்டுகளும் வெளிவந்த வண்ணமாக உள்ளன. இந்த நிலையில், தற்போது ஒரு தடகள பயிற்சியாளர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பிரபல தடகள பயிற்சியாளரான நாகராஜன் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் நடத்திவருகிறார். பல முன்னணி தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்கியவர், விளிம்பு நிலையில் இருந்த இளைஞர்களுக்கு எதிர்காலம் கொடுத்தவர் என்று இத்தனை காலம் விளையாட்டு சமுதாயம் அவரைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. 

ஆனால், விளிம்பு நிலையில் இருந்த வந்த வீரர், வீராங்கனைகளை அவர் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கிறது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை ஒருவரின் குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதன் மூலம் விளையாட்டுத் துறையில் நடந்து வரும் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக அந்த வீராங்கனை தனது குறுஞ்செய்தி மூலம் பயிற்சியாளர் நாகராஜனால் விளிம்பு நிலையில் இருந்து வரும் தடகள வீராங்கனைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் சாதிக்க பெரும் கனவுகளோடு வரும் வீராங்கனைகளை வயது வித்யாசமின்றி அவர்களின் எதிர்காலத்தை குறிவைத்து மிரட்டியே தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவரால் 14, 15 வயது உள்ள வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை 20 க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை மிரட்டி பயிற்சியாளர் நாகராஜன் தனது இச்சைக்கு பணிய வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனை ஒருவரின் தந்தை மூலம் பயிற்சியாளர் நாகராஜன் மீது தமிழ்நாடு தடகள சங்கத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் தனது மகளிடம் பயிற்சியாளர் நாகராஜன் தவறாக நடந்துகொள்வதாக குறிப்பிட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஒருபுறம் நடந்து முடிந்த நிலையில், தற்போது  பயிற்சியாளர் நாகராஜன் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவியத் துவங்கியுள்ளன. 

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு தடகள சங்கம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சியாளர் நாகராஜனிடம் காவல் துறையினர் மூலம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் உத்தரவின் பேரில் புகார்களின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.