ப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் தலைக்கு அருகில் காய்கறி..! புது காதலி..! காவல்துறை விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மைகள்..!

ப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் தலைக்கு அருகில் காய்கறி..! புது காதலி..! காவல்துறை விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மைகள்..!

தலைநகர் டெல்லியில் காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த அஃப்தப்பிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்களைப் பெற்றுள்ளது காவல்துறை.

டெட்டிங் ஆப்பில் பழக்கம்:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அஃப்தப் அமீன் பூனாவாலா என்ற இளைஞர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.  டெட்டிங்க ஆப் மூலம் ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதல் முறை டேட்டிங் சென்ற போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். 

கொலை

லிவ் இன் டூ கேதர்:

இந்த விவகாரம் ஷ்ரத்தாவின் வீட்டிற்கு தெரிந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் டெல்லிக்கு சென்று தனி வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, டெல்லி சென்றதும் ஷ்ரத்தா தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இருப்பினும், சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் இடத்தை கண்டுபிடித்த அந்த பெண்ணின் தந்தை, டெல்லிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு, வீடு பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: க்ரீஷ்மா, ஜெஸ்லீன் வரிசையில் சுஜி..! கதி கலங்க வைக்கும் குமரி சம்பவம்..!

காதலியை கொன்ற காதலன்:

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உடனடியாக பெண்ணின் காதலன் அஃப்தப்பை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. காதலித்து வந்தவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா,  பிற பெண்களுடன் காதலன் நெருக்கமாகப் பழகுவது தெரிய வந்ததால் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், தலையணையால் முகத்தை மூடி மூச்சடைக்க வைத்து காதலியை அஃப்தாப் கொலை செய்துள்ளார்.

பிரிட்ஜ்

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்த உடல்:

இதையடுத்து அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில்  சேமித்து வைத்து,  டெல்லியில் ஒவ்வொரு பகுதிகளிலும் வீசி எறிந்துள்ளார். இதற்காக 18 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளார். டெக்ஸ்டர் என்ற ஆங்கிலத் தொடரைப் பார்த்து இந்தக்கொலையை அரங்கேற்றியதாகவும் அஃப்தப் விசாரணையில்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலைக்கு அருகில் காய்கறி:

ஷ்ரத்தவை கொன்ற மறு நாளே மீண்டும் டேட்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்த அஃப்தப், இதற்கு முன்பு தன்னுடன் சேட் செய்த ஒரு பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். வந்த பெண்ணிற்கு சமையலும் செய்து கொடுத்துள்ளார் அஃப்தப். குளிர்சாதன பெட்டியில் ஷ்ரத்தாவின் தலைக்கு அருகிலேயே காய்கறிகளையும் வைத்துள்ளார். இவை எல்லாவற்றையும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார் அஃப்தப்.

சாரதா கொலை

வீட்டிற்கு வந்த பெண் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்கவில்லை, பார்த்திருந்தால் மே மாதமே அஃப்தப் சிக்கியிருக்கலாம் அல்லது அந்த பெண்ணையும் அஃப்தப் கொலை செய்திருப்பார் என்கிறார்கள் காவல்துறையினர். 

காதலியை கொலை செய்து, தலையை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன் பக்கத்திலேயே காய்கறி, பால், தயிர் என வைத்து அதையும் சிறிதும் கலங்காமல் எடுத்து உண்ணுமளவிற்க்கு கொடூர மனம் படைத்தவராக இருந்துள்ளார் அஃப்தப் என்கிறார்கள் காவல்துறையினர்.