ராமநாதபுரம் அருகே இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் களிமங்குண்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடற்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அந்த தகவலையடுத்து அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் சுமார் 10 கிலோவிற்கு அதிகமான தங்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்த சுங்கத்துறையினர் அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.