4 ஆண்டுகளாக தேடப்பட்ட பெண் கைது!!!

கொலை முயற்சி, கலவரம்  தூண்டுதல்  வழக்கில் 4 ஆண்டுக்ளாக தர்மபுரி போலீசார் தேடிய பெண்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.

4 ஆண்டுகளாக தேடப்பட்ட பெண் கைது!!!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (66) என்ற பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதில் கடந்த 2018ம் ஆண்டில் கிருஷ்ணாபுரம் போலீசார் இவர் மீது கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்குதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தந்து இருந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க | கோபத்தில் வெளிநாடு கிளம்பிய தங்கையை தடுக்க முயற்சி : பாசக்கார அண்ணன் செய்த காரியம் !!

விசாரணையில் ஜெகதாம்பாள் போலீசிடம் சிக்காமல் அமெரிக்காவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார்.  இந்த நிலையில் 4  ஆண்டுகளுக்குப் பிறகு ஜெகதாம்பாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து துபாய் வழியாக  சென்னை வந்து உள்ளார். சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்  ஜெகதாம்பாளை வெளியே அனுப்பபாமல் தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தந்தனர்.

தர்மபுரி மாவட்ட போலீசார் சென்னை வந்து ஜெகதாம்பாளை அழைத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.