கருமுட்டை விற்பனை: வெளிமாநில மருத்துவமனைகளுக்கு தொடர்பு?

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் இடைத்தரகர் மாலதிக்கு வெளிமாநில மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து போலிசார் விசாரிக்க உள்ளனர்.

கருமுட்டை விற்பனை: வெளிமாநில மருத்துவமனைகளுக்கு தொடர்பு?

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டையை, போலி ஆதார் கார்டு மூலம் விற்பனை செய்த விவகாரத்தில் அவரது தாய், தாயின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதற்கிடையே, இவ்வழக்கில் சேலம், ஓசூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் மாலதியிடம் விசாரணை நடத்த முடிவு செய்த காவல்துறையினர், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தனர். இந்நிலையில் மாலதியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க போலிசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  மாலதிக்கும் வெளிமாநிலத் தரகர்களுக்குள் உள்ள தொடர்பு குறித்து விசாரணைக்கு பிறகு தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.