மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது...! 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் மண்டபம்...!! 

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது...! 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் மண்டபம்...!! 

அரியலூர் மாவட்டத்தில் ராணி மங்கம்மாள் மண்டபம் மராமத்து பணிநிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராணிமங்கம்மாள் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் சிதிலமடைந்து பயன்பாடடற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்துடன், ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் இணைந்து 2 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை செய்து வந்தது. இதில் மண்டபத்தினை சுத்தம் செய்து வர்ணம் பூசுதல்,  பாதுகாப்பு வேலி மற்றும் கேட் அமைக்கும் பணி போன்றவை செய்யப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவு பெற்று நேற்று மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கபட்டது.

இதன்மூலம் சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவிலுக்கு பாத யாத்திரையாக  செல்பவர்கள் இங்கு தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் ராம்கோ சிமெண்ட் ஆலை அதிகாரிகள், ஊர் முக்கியதஸ்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.