உரிய ஆவணங்களுடன் வந்து கேட்டால்  32 கிராம் தங்க சங்கிலி...!!

உரிய ஆவணங்களுடன் வந்து கேட்டால்  32 கிராம் தங்க சங்கிலி...!!

ரயில் நடைமேடையில் கிடந்த 32 கிராம் தங்க சங்கிலியை நேர்மையாக அதிகாரியிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

சென்னை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை.  இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில்  கடந்த 21ஆம் தேதி அன்று 8வது மற்றும் 9வது நடைமேடையில்
தூய்மை செய்து கொண்டிருந்த போது நடைமேடையில் சுமார் 32 கிராம்( 4 சவரன்) எடையுள்ள தங்க செயின் கிடைத்துள்ளது. 

உடனடியாக அதை கண்டெடுத்த செந்தாமரை அருகில் பணியில் இருந்த உதவியாளர் மார்க்கப்பந்துவிடம் ஒப்படைத்துள்ளார்.  இது குறித்து மார்க்கப்பந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் நேற்று செயினை எடுத்து கொடுத்த துப்புரவு பணியாளர்  செந்தாமரையின் நேர்மையைப் பாராட்டி வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் செயினின் உரிமையாளரை கண்டுபிடிக்க தினசரி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் வந்து கேட்டால் செயின் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  காத்தாடி மாஞ்சா நூல்... உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்!!