தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை...

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே அதிகாலையில், உள்ளே நுழைந்து 32 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை...

நெல்லை | வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஷகிலா வீட்டில் தனது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் முன்புற சன்னல் கம்பிகளை அறுத்து எடுத்து உள்ளே புகுந்து ஷகிலாவிடம் அருவாளை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | இரண்டு ஆண்டுகளாக போலி கையெழுத்து... ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை!!

கொள்ளை போன நகைகளின் மதிப்பு 32 பவுன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வீட்டு முன்பு உள்ள சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துள்ளனர்.

மேலும் அங்குள்ள கோழி ஒன்றின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஆங்காங்கே சிதற விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | ஏ.டி.எம் இயந்திரத்தையே உடைத்து திருடிய ஜகஜால கில்லாடி...