இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 7 மீனவர்கள்.. தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் பாதிப்பு..!

என்று தான் முடியுமோ இந்த எல்லை பிரச்னை என மீனவர்கள் வருத்தம்..!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 7 மீனவர்கள்.. தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் பாதிப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்:

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளின் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சதீவு, நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். 

7 மீனவர்கள் கைது:

நாலாபுறமும்  சிதறி ஓடிய படகுகளில் ஒரு படகை சிறை பிடித்து அதிலிருந்து ஏழு மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக, இலங்கை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்:

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களது படகையும் உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி தொடர்ந்து மீன் பிடிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.