தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி...! எப்பொது..? எங்கு நடைபெறுகிறது..?

தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி...! எப்பொது..? எங்கு நடைபெறுகிறது..?

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பு சார்பாக தென்னிந்திய அளவிலான மஸ்குல் மேனியா 2022 என்ற பெயரில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் மற்றும் கட்டுமஸ்தான அழகி தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ,  வருகிற நவம்பர் 27ஆம் தேதி இந்த போட்டியானது நடைபெற உள்ளது. தென்னிந்தியாவிலிருந்து பலர் பங்கேற்க உள்ளன.ர் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்க உள்ளனர் என்றும் நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்கும் மிகாமல் தங்களுடைய உடல் அழகை காட்டி பரிசு பெற உள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், வயது மற்றும் எடை அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. ஆண் பெண் இருபாலருக்கும் அதே போன்ற நடைமுறையில் தான் நடைபெற உள்ளது என்றும் தென்னிந்திய அளவில் நடக்கும் போட்டி சூலூரில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மனைவியை கொன்று விட்டு...நீலிக்கண்ணீர் வடித்த கணவன்...கொடுத்த வாக்குமூலம் என்ன?