இலங்கையில் இருந்து 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!!!

இலங்கையில் இருந்து 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!!!

இலங்கை தலைமன்னாரில் இருந்து எட்டு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை அவர்களை மீட்டு மண்டபம்  மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை.

மேலும் படிக்க | ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு : இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கருத்து

இலங்கை தலைமன்னாரிலிருந்து  ரூபாய் 1.45 லட்சம் இலங்கை பணம் கொடுத்து கள்ளப் படகு மூலம் நேற்று இரவு 10:30 மணியளவில் தனுஷ்கோடி மூன்றாம் தீடை  பகுதிக்கு எட்டு பேர் அகதிகளாக வந்தீரங்கி உள்ளனர் அவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஓர் கிராப்ட் கப்பலில் சென்று அவர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மரைன் போலீசாரிடம் இன்று காலை  ஒப்படைத்துள்ளனர் தற்போது மரைன் போலீசார் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த சசிகுமார், உமாதேவி,யோவிகா, துவாரகா,மகேந்திரன் பார்வதி கம்சிகா இலவன் ஆகிய எட்டு பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | 4 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மருத்துவர்

மேலும் போலீசார் அவர்களை தனுஷ் கேடி காவல் நிலையத்தில் இருந்து  மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு மேல்விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் அவர்கள் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது