வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்த யானைக் கூட்டம்...!

வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்த யானைக் கூட்டம்...!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த விளைநிலங்களுக்கு  கூட்டமாக வந்த காட்டு யானைகள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயி பொம்முராஜ் என்பவர் தோட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. குலை தள்ளும் பருவ நிலையில் உள்ள வாழை மரங்களை யானைகள்  சேதப்படுத்தியதால் மரம் ஒன்றுக்கு ரூ 500 வரை செலவு செய்து உற்பத்தி செய்த விவசாயிகள் உற்பத்திச் செலவை எடுக்க முடியாமல் பெரிதும் நஷ்டம் அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகழி வெட்டி யானை உட்பட பல்வேறு வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யானைகள் அட்டகாசத்தால் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விளைநிலங்களுக்குள் உலா வரும் யானை கூட்டங்களால் அந்தப் பகுதியில் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதையும் படிக்க : கல்லூரி வளாகத்தில் சுற்றி திரியும் சிறுத்தை...! அச்சத்தில் மாணவர்கள்...!