செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம்...!!

செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம்...!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை மற்றும் படூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் படூர் ஊராட்சியில் துவங்கப்பட்டது.

திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சியில் படூர் ஊராட்சி அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் இல்லா கிராமத்தை உருவாக்குவோம், நெகிழி பயன்படுத்த மாட்டோம், மஞ்சப்பை பயன்படுத்துவோம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன், மக்கும் குப்பை மக்காத குப்பை என தனி தனியே பிரித்தெடுப்போம், என் குப்பை என் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன் என்று உறுதிமொழி ஏற்றனர். 

அதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் இந்துபாலா பொதுமக்களுக்கு மஞ்சப்பையும், தூய்மை பணிகளுக்கு உபகரணங்களும் வழங்கி, மூன்று தூய்மை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்ற பேரணியை செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் இந்துபாலான் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

படூர் ஊராட்சி அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி OMR சாலையில் சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகம் வந்தடைந்தது.  பேரணி சென்றபோது சாலையோரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என்று ஆய்வு செய்ததில் ஒரு சில கடைகளில் உள்ள பிளாஸ்டிக்கை கைப்பற்றிய அதிகாரிகள் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து பிளாஸ்டிக் மற்றும் தூய்மை குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

அதேபோல் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி செல்லக்கூடாது, மஞ்சப்பையை பயன்படுத்துங்கள் என்று மஞ்சப்பையும் வழங்கினர். இறுதியில் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட திட்ட இயக்குனரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, பூமகள்தேவி, மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவன தலைவர் கே. எ. எஸ். சுதாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:  பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை இழுத்து பூட்டியதால் பரபரப்பு...!!