கள் குடிலுக்கு மது குடிக்க சென்ற  ஆதிவாசி இளைஞர்   மின்வேலியில் சிக்கி  பலி...!!!

கள் குடிலுக்கு மது குடிக்க சென்ற  ஆதிவாசி இளைஞர்   மின்வேலியில் சிக்கி  பலி...!!!

காரமடை அருகே மேல்பாவி கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கள் குடிலுக்கு மது குடிக்க சென்ற  ஆதிவாசி இளைஞர்   மின்வேலியில் சிக்கி  பலியாகியுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர்  குப்புசாமி (50). இவருக்கு சொந்தமான  நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இதனிடையே இவரது தோட்டத்தில்  உள்ள தென்னை மரங்களில் சட்ட விரோதமாக தென்னங்கள் இறக்கி விற்பனையும் செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிக்க காளியூர் பகுதியை சேர்ந்த ஆதிவாசி இளைஞர் ஜெயக்குமார்(34) அவரது நண்பர்கள் சிலருடன் கள் குடிக்க இருசக்கர வாகனத்தில் குப்புசாமி தோட்டத்திற்கு செனறுள்ளனர்.

அப்போது இவருடன் கள் குடிக்க வந்த சக நண்பர்கள் அளவான போதையுடன் வீடு திரும்பி உள்ளனர்.  ஆனால் ஜெயக்குமார் மட்டும் போதை தலைக்கு ஏறியதால் அங்கேயே படுத்துள்ளார்.  இதனிடையே இந்த பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விவசாயி குப்புசாமி மின்வேலி அமைந்துள்ள நிலையில் இரவு நேரமாகியதால் குப்புசாமி காட்டுயானைகள் விளைநிலத்திற்கு நுழையாமல் இருக்க மின் வேலியை ஆன் செய்துள்ளார்.

இதையடுத்து போதை தெளிந்த  ஜெயக்குமார் போதை தெளிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக போதையில் இருசக்கர வாகனத்தில் குப்புசாமி தோட்டத்தின் வழியே சென்றுள்ளார்.  அப்போது தோட்டத்தின் நுழைவு வாயிலில் காட்டுயானைகள் வருவதை தடுக்க வைத்திருந்த மின்வேலியின் மீது விழுந்துள்ளார்.  இதையடுத்து  ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்து மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த வழியாக வந்த பொருட்கள் அது குறித்து தகவல் அளித்து உடனடியாக மின்சாரம் துன்டிக்கபட்டுள்ளது

இதனையடுத்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் உயிரிழந்த  நபரின் உடலை மீட்டு  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காரமடை போலீசார் குப்புசாமி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை...!!