சென்னை பரங்கிமலையில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி!!!

சென்னை பரங்கிமலையில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி!!!

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து செல்லும் நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சி பெறும் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம் குறுகிய கால ராணுவ சேவைக்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. 49 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு பின் நான்கு ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றுவர்.  குறிப்பதாக, 11 மாத பயிற்சி பெற்ற 180 க்கும் மேற்பட்ட இளம் ராணுவ வீரர்கள் பயிற்சி நாளையுடன் நிறைவடைகிறது.  இந்த ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுவினர்களுக்கு குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக் உட்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் எற்பாடு செய்யப்பட்டது.

சென்னை ஒடிஏவில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குதிரையேற்ற சாகசங்களை செய்தனர். தடைகளை தாண்டுதல், குதிரையில் இருந்தே இலக்குகளை தாக்குதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து அசத்தினர்.  பின்னர் ராணுவ பயிற்சி மையத்தில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்தனர்.  அவர்களை தொடர்ந்து பேண்ட் வாத்திய கலைஞர்களின் பேண்ட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  அதனை தொடர்ந்து, தற்காப்பு கலையான களரிப்பயிற்று சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் களரி பயிற்சி பெற்ற வீரர்கள் செண்ட மேலம் இசைக்கேற்ப நடனமாடியும், ஆயுதங்களை கொண்டும் பல்வேறு சாகசங்களை செய்தனர்.

இறுதியாக, ராணுவ வீரர்கள் போரின்போது துப்பாக்கி சூடு நடத்துவது, பதுங்கி இருந்து எதிரிகளை எவ்வாறு தாக்குவது என்பதை தத்ரூபமாக செய்து காட்டினர்.  சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் கமாண்டெண்ட் லெப்டனன்ட் ஜென்ரல் சஞ்சீவ் சவுஹான் முன்னிலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாகச செயல்கள் செய்த வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.

இதையும் படிக்க:  கள் குடிலுக்கு மது குடிக்க சென்ற  ஆதிவாசி இளைஞர்   மின்வேலியில் சிக்கி  பலி...!!!