மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோன்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்து...!

மாதவரம் மஞ்சபாக்கம் சாலையில் மழை நீர் வடிகால் பள்ளம் தோன்டும் போது கடையின் பக்கவாட்டு முன்பக்க சுவர் விழுந்து விபத்து.

மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோன்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்து...!

மாதவரம் மஞ்சபாக்கம் 200 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. தற்போது ஒருபுறம் பணிகள் நடைபெற்று முடிந்ததும், மறுபுறம்  பள்ளத்தை இராட்சத இயந்திரத்தின் மூலமாக பள்ளம் தோன்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது தனியாருக்கு சொந்தமான டைல்ஸ் நிறுவனத்தின் முன்பக்க சுவர் மற்றும் கிரில் கேட் தீடீரென பிடிமானம் இல்லாமல் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த 5 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேற வழி இல்லாததால் பின்பக்க வழியாக சுவர் ஏறி குதித்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இதனை அறிந்த சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரி கோவிந்தராஜ், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை உணர்ந்து  கம்பெனி முதலாளியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் கம்பெனியின் உரிமையாளர் சிங்காரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி தனது கம்பெனியின் முன்பு  பள்ளம் தோண்டியது காரணமாக பிடிமானம் இல்லாமல் சுற்று பக்கவாட்டு சுவர் இடிந்ததாக குற்றம் சாட்டினார். மேலும், இதன் காரணமாக கம்பெனியில் இருந்து வெளியே வருவதற்கும் கம்பெனியை பூட்டுவதற்கும்  வழியின்றி தவித்து வருவதாகவும் இதனை சரிசெய்ய சுமார் 3 லட்சம் வரை  செலவு ஆகும் எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.