போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி செய்த பலே கில்லாடி...

போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி செய்த பலே கில்லாடி...

தனியார் நிதி நிறுவன கம்பெனியை போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றி நான்கு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற நபர் கைது

புகார் மனு :

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கின்ற ராஜ் . இவர் பல்வேறு போலியான ஆவணங்களை தயார் செய்து தனியார் நிதி நிறுவனம் மூலமாக கடன் பெற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, கடன் தொகையை முறையாக கட்டாமல் இருந்துள்ளார்.  அண்ணா சாலையில் உள்ள அந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.

காவல்துறை விவசாரணை :

 கொடுங்கையூர் போலீசார் தனியார் நிதி நிறுவனம் கொடுத்த முகவரிக்கு சென்று ஆய்வு செய்தபோது அப்படிப்பட்ட நபர் அந்தப் பகுதியில் இல்லை என்பது தெரிய வந்தது . இதனை அடுத்து பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து நேற்று ராஜேஷ் என்பவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் , விசாரணையில் தனியார் நிறுவனம் மூலம் அவர் 4 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று பொருட்கள் வாங்கியது தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இவர் மீது ஏற்கனவே தண்டையார்பேட்டை மற்றும் மத்திய குற்றப்பிரிவில் வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலி ஆவணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனத்தை ஏமாற்றி கடன் பெற்ற காரணத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.